காஞ்சிபுரத்தில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 5 டன் மாம்பழங்கள் பறிமுதல்

காஞ்சிபுரத்தில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 5 டன் மாம்பழங்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

காஞ்சிபுரத்தில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 5 டன் மாம்பழங்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

 காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் காஞ்சிபுரம் மார்கெட் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த சோதனையின்போது காஞ்சிபுரம் மார்கெட் பகுதியில் உள்ள மூன்று குடோன்களில் கார்பைடு கல்லை பயன்படுத்தி மாம்பழம் பழுக்க வைக்கப்படுவது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மாம்பழங்கள் யாருக்கு சொந்தம்

கார்பைடு கல்லை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மாம்பழங்களை பயன்படுத்துவதன் மூலம் நரம்பு மண்டலம் பாதிப்படைவதாகவும், குடல் புன், வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படுவதுடன் புற்றுநோய் வருவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளன என்றும் மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய கார்பைடு கல்லை பயன்படுத்தி டன் கணக்கில் மாம்பழத்தை பழுக்க வைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த மாம்பழங்கள் யாருக்கு சொந்தமானவை என்று உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது இது தொடர்பாக விசாரித்து வருகிறோம் என்று மட்டும் தெரிவித்தார். மாம்பழங்களை குழந்தைகள் அதிகம் விரும்பு உண்கின்றனர். உயிரோடு விளையாடும்

இதுபோன்ற நபர்களை சம்பிரதாயத்துக்கு அங்கு பணி செய்யும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்துவிட்டு தப்பவிடக் கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com