நரேந்திர மோடியின் சகோதரர் சங்கர மடம் வருகை:சங்கராச்சாரியார்களை சந்தித்து ஆசி

காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் பாய் தாமோதரதாஸ் மோடி வருகை தந்தார். அவர் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாபதிகள் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் பாய் தாமோதரதாஸ் மோடி வருகை தந்தார். அவர் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாபதிகள் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார்.

 இவர் திங்கள்கிழமை திருமலை திருப்பதியில் வழிபாடு நடத்தினார். இதனைத் தொடர்ந்து செவ்வாய்கிழமை காலை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்துக்கு வந்தார்.

இங்கு ஆலய அர்சகர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அங்கு வழிபாடு நடத்திய அவர் பின்னர் காஞ்சிபுரம் சங்கர மடம் வருகை தந்தாôர்.

 முதலில் சங்கரமடத்தின் மடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அவரிடம் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து அவர் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜேயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவர் அறையில் சுமார் 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து வெளியில் வந்த பிரகாலாத்பாய் தாமோதரதாஸ் மோடி நிருபர்களிடம் கூறியது:

 நான் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் தரிசனம் செய்யவும், சங்கராச்சாரியார்களை சந்தித்து ஆசி பெறவும் காஞ்சிபுரம் வந்தேன். இங்குள்ள சங்கராச்சாரியார்களும், காமாட்சி அம்மனுக்கும் சிறப்பான வரலாறு உண்டு. நாட்டில் நல்ல மழை பெய்து, விலைவாசி குறைவாகவே இருந்து, மக்கள் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும் நான் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் என்றார்.

இதனைத் தொடர்ந்து அவர் வேலூர் புறப்பட்டுச் சென்றார். அவர் வருகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com