காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று தேரோட்டம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் மே 25-ம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதனையொட்டி போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் மே 25-ம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதனையொட்டி போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

 காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலய வைகாசி பிரம்மற்சவம் கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதிநயுலா நடைபெற்று வருகிறது. இவ் விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை மே 21-ம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருத்தேர் மே 25-ம் தேதி நடைபெறுகிறது.  இதற்காக காந்தி வீதியில் மூடப்பட்டிருந்த தேர் திறக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்தில் மாற்றம்

இந்த தேர் திருவிழாவை முன்னிட்டு மே 25-ம் தேதி காலை 5.30 மணி முதல் மாலை 6 மணிவரை காஞ்சிபுரம் நகர போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட பேருந்துகள் அந்த பேருந்து நிலைத்துக்கு வந்து சேரும். அங்கிருந்துதான் பேருந்துகள் புறப்படும்.

 தற்காலி பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் செல்லும் ஊர்களின் விவரங்கள்:

பொன்னேரிக்கை அண்ணா நினைவு தூன் - ஸ்ரீபெரும்புதூர், மதுரவாயல் வழியாக சென்னை மார்கம் செல்லும் பேருந்துகள். ஒலிமுகமதுபேட்டை பெட்ரோல் பங்க் அருகில்- வேலூர் மார்க்கம் மற்றும் அரக்கோணம் மார்க்கம் செல்லும் பேருந்துகள்.

பழைய ரயில் நிலையம் அருகில் (வையாவூர் சாலை)-செங்கல்பட்டு, தாம்பரம் மார்க்கம் செல்லும் பேருந்துகள். ஓரிக்கை சந்திப்பு-உத்திரமேரூர் மார்க்கம் செல்லும் பேருந்துகள். செவிலிமேடு சந்திப்பு-வந்தாவாசி மார்க்கம், செய்யார் மார்க்கம் செல்லும் பேருந்துகள்.

 மேற்குறிப்பிட்ட தற்காலிக பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே அந்தந்த பேருந்துகள் வந்து செல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com