ராமேசுவரம் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை வருவாய்  ரூ.68.63  லட்சம்

ராமேசுவரம் திருக்கோயிலில் திங்கள் கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ரூ.68 லட்சத்தை தாண்டியது. 

ராமேசுவரம்,

ராமேசுவரம் திருக்கோயிலில் திங்கள் கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ரூ.68 லட்சத்தை தாண்டியது. 

    ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் சுவாமி,அம்மன் மற்றும் இதர சுவாமிகள் சன்னதியிலும்,அதுபோல திருக்கோயிலின் உபகோயிலான கோதண்டம்ராமர்கோயில்,நம்புநாயகி அம்மன் கோயில் ஆகிய கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக உண்டியல்களில் செலுத்தப்பட்ட பணம் நிரம்பியது.

இந்த பணத்தை  பரமக்குடி இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமசாமி மற்றும் ராமநாதபுரம் இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் சுந்தரேஸ்வரி, ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ்  ஆகியோர்கள் முன்னிலையில் எண்ணும் பணி திருக்கல்யாண மண்டபத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது.

இதில் வெளிநாட்டு பணம் உள்பட ரொக்கமாக  ரூ.68,லட்சத்து 63  ஆயிரத்து 245 மும், 27 கிராம் தங்கமும், 3 கிலோ 240 கிராம் வெள்ளியும்  கிடைத்தது.இப்பணியில் திருக்கோயில் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன்,  காசாளர் ராமநாதன் மற்றும் திருக்கோயில் கண்காணிப்பாளர்கள் ககாரீன்ராஜ்,

ராஜாங்கம்,பாலசுப்பிரமணியன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன்,அலுவலர் மாரியப்பன் உள்பட திருக்கோயில் பேஷ்கார்கள் மற்றும் பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளும்,இந்தியன் வங்கி ஊழியர்களும் மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் ஈடுபட்டனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com