தேர்தல் விதிமீறல் வழக்கு: பண்ருட்டி நீதிமன்றத்தில் ராமதாஸ் ஆஜர்

2011 தேர்தல் விதிமீறல் வழக்கில் பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் எம்.பி நெப்போலியன், நெய்வேலி எம்.எல்.ஏ சபா ராஜேந்திரன் ஆகியோர் பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜராக

நெய்வேலி: 2011 தேர்தல் விதிமீறல் வழக்கில் பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் எம்.பி நெப்போலியன், நெய்வேலி எம்.எல்.ஏ சபா ராஜேந்திரன் ஆகியோர் பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக தேர்தலில் பண்ருட்டி சார்பில் போட்டியிட்ட சபா ராஜேந்திரனை ஆதாரரித்து பாமக கூட்டணி கட்சித் தலைவரான ராமதாஸ் தொல் திருமாளவன், சுபவீர பாண்டியன், நெப்போலியன். ஆகியோர் கலந்துகொண்டனர். தேர்தல் விதியை மீறியதாக இவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜராகிக் குற்ற நகலை பெற்றுக்கொண்டார் ராமதாஸ். இதைத் தொடர்ந்து இன்று பண்ருட்டி நீதிமன்றத்தில் வருகை தந்தார்.

அவர் செய்தியாளகளிடம் கூறுகையில்,

கடந்த 2011-ம் ஆண்டு போடப்பட்ட பொய் வழக்கில் ஆஜராக பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்திற்கு வந்துள்ளதாக அவர் கூறினார். காவிரி பிரச்னை தொடர்பாகக் கேட்டதற்கு 2012-ல் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை அமல்படுத்தாமல் அலைக்கழித்து வருகின்றது. தமிழக அரசு உத்தரவின் படி கர்நாடகா 10 நாட்களுக்குள் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும், இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com