பேராசிரியர் பணிக்கு திரும்புகிறார் மன்மோகன் சிங்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தாம் படித்த பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பேராசிரியர் பணிக்கு திரும்புகிறார் மன்மோகன் சிங்

சண்டிகர்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தாம் படித்த பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். 2014 -ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. அதன்பின்னர் அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்தேடுக்கப்பட்டார்.

இந்நிலையில், ஆரம்ப காலத்தில் பேராசிரியராக பணியாற்றிய மன்மோகன் சிங்கை, கவுரவ பேராசிரியராக பணியாற்ற பஞ்சாப் பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்திருந்தது.

இதையடுத்து எம்.பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஆதாயம் பெறும் பதவிகள் வகிக்க கூடாது என அரசியல் சாசன சட்டத்தில் கூறப்பட்டுள்ளதால், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கவுர பேராசிரியராக பணியாற்றுவது ஆதாயம் தரும் பணியா என மத்திய அமைச்சரவையிடம் கருத்து கேட்டிருந்தார் மன்மோகன் சிங்.

இது தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு கூடி விவாதித்தது. அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கவுரவப் பேராசிரியர் பணியை ஏற்கலாம். அது ஆதாயம் தரும் பணியில் வராது என்று தீர்மானிக்கப்பட்டது. மன்மோகன் சிங் பேராசிரியராக பணியாற்ற தடை இல்லை என்று மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்ட மன்மோகன் சிங், தான் படித்த பல்கலைக்கழகத்திலேயே பேராசியராக பணியாற்ற முடிவு செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com