அசையாச் சொத்து ஏதும் இல்லை: கங்கை அமரன் 

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் (69) வேட்புமனுத்தாக்கலின் போது
அசையாச் சொத்து ஏதும் இல்லை: கங்கை அமரன் 

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் (69) வேட்புமனுத்தாக்கலின் போது அளித்துள்ள உறுதிமொழி படிவத்தில் தனக்கு அசையாச் சொத்து ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார். 

பிரபல இசைஅமைப்பாளர், பாடகரான கங்கை அமரன்  கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார். தற்போது பாஜக வேட்பாளராக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் கங்கை அமரன்  தனக்கு முதலீடுகள், ரொக்கம் உள்ளிட்டவைகள் மூலம் அசையும் சொத்து ரூ. 13,30,454-ம், தனது மனைவி பெயரில் நகை, ரொக்கம் உள்ளிட்ட அசையும் சொத்து ரூ. 10,91,507-ம் உள்ளதாகவும், மேலும் தனது பெயரிலோ, தனது மனைவி பெயரிலோ கார் உள்ளிட்ட வாகனங்கள் ஏதும் இல்லை.

சொந்தவீடு, காலிமனை, விவசாய நிலம், பூர்வீகச் சொத்து உள்ளிட்ட அசையாச் சொத்துக்கள் ஏதும் இல்லை எனவும், ஏழாம் வகுப்புவரை படித்துள்ள தான் நிகழ்ச்சி தொகுப்பாளர், இசை அமைப்பாளராக பணியாற்றி வருவதாக உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com