இந்திய கடலோர காவல்படை வருத்தம் தெரிவித்தாலும் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும்: மீனவ அமைப்புகள்

இந்திய கடலோர காவல்படை வருத்தம் தெரிவித்தாலும், நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மீனவ அமைப்புகள் தெரிவித்துள்ளன. 
இலங்கை துறைமுகத்தில் நிறுத்திவைக்கபட்டிருந்த 6 படகுகளை மீட்டு ராமேசுவரம் துறைமுகத்திற்கு சனிக்கிழமை மற்றொரு படகில் கயிறு கட்டி இழுத்து வந்தனர்.
இலங்கை துறைமுகத்தில் நிறுத்திவைக்கபட்டிருந்த 6 படகுகளை மீட்டு ராமேசுவரம் துறைமுகத்திற்கு சனிக்கிழமை மற்றொரு படகில் கயிறு கட்டி இழுத்து வந்தனர்.

இந்திய கடலோர காவல்படை வருத்தம் தெரிவித்தாலும், நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மீனவ அமைப்புகள் தெரிவித்துள்ளன. 

கடந்த 13 திங்கள் கிழமை அன்று பிற்பகல் 4 மணி அளவில், இந்தியக் கடலோரக் காவல்படையினர், ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்கிழமை மதியம் ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளம் அருகே விசைப்படகு மீனவ சங்க பிரநிதிகளின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, இந்தியக் கடலோர காவல் படையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும் இந்தத் துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நாளை புதன்கிழமை அடையாள வேலை நிறுத்தப் போராட்டமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளதாக அறிவித்தனர். ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம் நடத்தி வரும் நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மீனவர்களுக்கு காவல் படை அழைப்பு விடுத்திருந்தனர். 

மேலும்  கடலோர காவல்படை அதிகாரிகளுக்கும், மீனவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் துப்பாக்கி சூடு புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் இந்திய கடலோர காவல்படை... * தவறுதலாக நடைபெற்ற சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என்றும் அதிகாரிகள் கூறினர்.  இந்நிலையில் இந்திய கடலோர காவல்படை வருத்தம் தெரிவித்தாலும், நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மீனவ அமைப்புகள் தெரிவித்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com