முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எப்படிப்பட்டவர் என்பது தற்போது புரிகிறது: முதல்வர் பழனிசாமி

கரூரில் நடைபெற்று வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி...
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எப்படிப்பட்டவர் என்பது தற்போது புரிகிறது: முதல்வர் பழனிசாமி

கரூர்: கரூரில் நடைபெற்று வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கரூர் அதிகளவு போர்வை ஏற்றுமதி செய்யும் மாவட்டமாக திகழ்கிறது ஜவுளி, பேருந்து கட்டும் தொழில் மற்றும் கொசுவலை உற்பத்தி போன்ற தொழில்களிலும் கரூர் மாவட்டம் சிறந்த விளங்குகிறது என்று கூறினார்.

மேலும் மக்கள், தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கும் வரை ஆட்சியை அசைக்க முடியாது. சலசலப்பு, துரோகம், சூழ்ச்சியினால் இந்த ஆட்சியை வீழ்த்த முடியாது. அரவக்குறிச்சி தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற இரவு பகலாக பாடுபட்டோம். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எப்படிபட்டவர் என்பது தற்போது புரிகிறது  

எங்கள் அனுபவம் தான் செந்தில் பாலாஜியின் வயது. கரூர் மாவட்டத்திற்கு செந்தில் பாலாஜி அவப்பெயரை ஏற்படுத்திவிட்டார் என்றும் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கள ஆய்வு மேற்கொள்ளப்படும்  என்றும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com