உத்தரப் பிரதேச அரசு தாஜ்மஹாலை சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. இதையடுத்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தாஜ்மஹால் குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உ.பி., மாநில அரசு வெளியிட்டுள்ள 2018 ம் ஆண்டு காலண்டரில் தாஜ்மஹால் இடம்பெற்றுள்ளது.
உபி.,மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்ட 2018 ம் ஆண்டுக்கான காலண்டரில் ஜூலை மாத பக்கத்தில் தாஜ்மஹால் இடம்பிடித்துள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கிய பொறுப்பில் இருக்கும் கோரக்பூர் கோயிலும் காலண்டரில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.