சலூனுக்குச் சென்ற முருகன், துர்க்கை உள்ளிட்ட இந்து கடவுள்கள்: மன்னிப்பு கேட்ட விளம்பரதாரர்!

அழகு நிலையத்தின் வரவேற்பறையில் தேவி துர்க்கை, மகா லட்சுமி, சரஸ்வதி ஆகியோருடன் முருகன் மற்றும் விநாயகரும் காத்திருப்பதை போல் கேலிச்சித்திர விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது.
சலூனுக்குச் சென்ற முருகன், துர்க்கை உள்ளிட்ட இந்து கடவுள்கள்: மன்னிப்பு கேட்ட விளம்பரதாரர்!
Updated on
1 min read

சிகையலங்கார நிபுணர் ஜாவத் ஹபீப்பிற்கு சொந்தமான ‘ஜாவத் ஹபீப் சிகையலங்கார நிலையம்’ சமீபத்தில் பிரபல நாளிதழில் அச்சு விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது, அது இந்து சமய உணர்ச்சிகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகச் சர்ச்சைகள் எழுந்த நிலையில் தனது செயலுக்கு ஜாவத் மன்னிப்பு கேட்டுள்ளார்.

15 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் (பல சினிமா பிரபலங்கள் உட்பட), இந்தியாவின் 24 மாநிலங்களில் 600-கும் மேற்பட்ட சிகையலங்கார நிலையங்கள், மூன்று தலைமுறைகளாக இந்த சிகையலங்கார தொழிலில் ஈட்டுப்பட்டுள்ளவர்கள் எனப் பல தனித்துவங்களைப் பெற்றிருக்கும் நிறுவனம் ஜாவத் ஹபீப் சிகையலங்கார நிலையம். 53 வயதான ஜாவத் இந்தியாவின் தலை சிறந்த ஏழு சிகையலங்கார நிபுணர்களுள் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனம் சமீபத்தில் இவர்களது அழகு நிலையத்தின் வரவேற்பறையில் தேவி துர்க்கை, மகா லட்சுமி, சரஸ்வதி ஆகியோருடன் முருகன் மற்றும் விநாயகரும் காத்திருப்பதை போல் கேலிச்சித்திர விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பலரது கவனத்தை ஈர்த்தது. அதே சமயம் இந்தக் கேலிச்சித்திரம் சமய உணர்ச்சிகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாக எதிர்ப்புக் குரல்களும் எழுந்தது.

உத்திர பிரதேச தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் வினய் பாண்டே தாக்கல் செய்த மனுவில் ஹபீப் நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரம், நாட்டில் உள்ள லட்சக் கணக்கான இந்துக்களின் உணர்ச்சியையும், நம்பிக்கையையும் இழிவுப் படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. 

இதையடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் “எங்களது விளம்பர பிரச்சாரம் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் பதியப்படவில்லை, தெரியாமல் யாருடைய உணர்ச்சிகளையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்” என்று மன்னிப்புக் கேட்டுள்ளார் ஜாவத்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com