திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்த ரஜினிகாந்தை மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்கவும், ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கவும் ரஜினி அவரை சந்திக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் கூறியதாவது: - கருணாநிதியுடன், ரஜினிகாந்த் சந்திப்பது ஆச்சரியப்படும் விஷயம் அல்ல. அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆசி பெற வந்ததாக ரஜினி தெரிவித்தார். வ்பெரியார், அண்ணா, கருணாநிதியால் பண்படுத்தப்பட்ட மண் தமிழக மண். திராவிட இயக்கத்தை அழிக்க முயற்சித்து பலர் தோற்ற வரலாறு அனைவருக்கும் தெரியும்.
வீட்டிற்கு வருவோரை இன்முகத்துடன் வரவேற்பது தமிழர் பண்பாடு என்ற முறையில் ரஜினிகாந்த்தை வரவேற்றோம். தி.மு.க. ஆதரவு ரஜினிக்கு தேவையா என்பது பற்றி தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம் என்று கூறினார். மேலும் தமிழகம் திராவிட இயக்கத்தால் பண்படுத்த மண். திராவிட இயக்கத்தை அழிக்க முயற்சித்து பலர் தோற்ற வரலாறு அனைவருக்கும் தெரியும் என்றும் கூறினார்.