இந்தியாவின் 100-வது செயற்கைகோளான கார்ட்டோ சாட்-2 வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சார்பில் 710 கிலோ எடை கொண்ட கார்டோசாட்-2 செயற்கைக்கோள், 100 கிலோ எடை கொண்ட மைக்ரோ சாட்டிலைட் மற்றும் 5 கிலோ எடை கொண்ட மிகச் சிறிய நானோ செயற்கைக் கோள்களையும் இஸ்ரோ இன்று வெள்ளிக்கிழமை காலை 9.28 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி -40 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.
ராக்கெட் புறப்பட்ட 17-வது நிமிடத்தில் இந்தியாவின் 100-வது செயற்கைகோளான கார்ட்டோ சாட்-2 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
710 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள், பூமியின் மேற்பரப்பை துல்லியமாக படம் எடுக்கும் திறன் கொண்டது.