ரூ.300 கோடி மின்கட்டணம் நிலுவை வைத்துள்ளது யார் தெரியுமா...? 

கடந்து 5 ஆண்டுகளாக முறையாக மின் கட்டணத்தை செலுத்தாமல் ரூ.300 கோடி மின்கட்டண நிலுவைத்துள்ளது உள்ளாட்சி அமைப்புகள் என்று புகார் 
ரூ.300 கோடி மின்கட்டணம் நிலுவை வைத்துள்ளது யார் தெரியுமா...? 

கடந்து 5 ஆண்டுகளாக முறையாக மின் கட்டணத்தை செலுத்தாமல் ரூ.300 கோடி மின்கட்டண நிலுவைத்துள்ளது உள்ளாட்சி அமைப்புகள் என்று புகார் எழுந்துள்ளது. 
 
தமிழகத்தில் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் தெருவிளக்குகள், தங்களுடைய அலுவலகத்திற்கு பயன்படுத்தும் மின்சாரத்திற்காக இதுவரை ரூ.300 கோடி ரூபாய் மின் கட்டணத்தை நிலுவை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் கடும் நிதிச்சுமையில் தவித்து வருவதற்கு இதுவும் ஒரு காரணம் எனகாரணமாக கூறப்படுகிறது. 

மேலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் முறையாக மின்கட்டணத்தை செலுத்துவதில்லை என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக தலைநகரில் உள்ள சென்னை மாநாகராட்சி உள்பட 12 மாநாகராட்சிகளும் இதுவரை ரூ.109 கோடி மின்கட்டணத்தை நிலுவை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

124 நகராட்சிகள் ரூ.55 கோடியும், 12 ஆயிரத்து 258 ஊராட்சி ஒன்றி அமைப்புகள் ரூ.170 கோடியும் நிலுவை வைத்துள்ளன. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுத்தால் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்றும் அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

மேலும் உள்ளாட்சி அமைப்புகள் படிப்படியாக மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com