714 ரயில்நிலையங்களில் 86,291 எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி நிறைவு

714 ரயில்நிலையங்களில் 86,291 எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி நிறைவு

714 ரயில்நிலையங்களில் 86,291 எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளன.  

714 ரயில்நிலையங்களில் 86,291 எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளன.  

மின்சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ரயில்வே நிலையங்களில் எல்இடி விளக்குகள் பொருத்தப்படும் என ரயில்வேதுறை அறிவித்தது. அதன்படி ரயில்வே நிலையங்கள், ஊழியர் குடியிருப்புகள், நடைமேடைகள் என அனைத்துப் பகுதிகளிலும் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் 714 ரயில்நிலையங்களில் 86,291 எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மேலும் எல்இடி விளக்குகளை அமைப்பதால் ஆண்டுக்கு 70 லட்சம் யூனிட் மின்சாரத்தை சேமிக்க முடியும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com