திருப்பதியில் வீடுகளுக்கான கியூ.ஆர். கோடு திட்டத்தை தொடங்கிவைத்தார் சந்திரபாபு நாயுடு 

நாட்டிலேயே முதல்முறையாக திருப்பதியில் ஒவ்வொரு வீட்டிற்கும் கியூ.ஆர். கோடு திட்டத்தை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு
திருப்பதியில் வீடுகளுக்கான கியூ.ஆர். கோடு திட்டத்தை தொடங்கிவைத்தார் சந்திரபாபு நாயுடு 


திருப்பதி: நாட்டிலேயே முதல்முறையாக திருப்பதியில் ஒவ்வொரு வீட்டிற்கும் கியூ.ஆர். கோடு திட்டத்தை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கிவைத்தார். 

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி கபில தீர்த்ததில் 150 ஏக்கரில் பல்வேறு மூலிகைச் செடிகளுடன் கூடிய நகர வனத்தை தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டார். 

பின்னர், என்.டி.ஆர் சந்திப்பிலிருந்து நகர வனம் திட்டம் குறித்த விழிப்புணர்வு பாதகைகளுடன் கூடிய மாணவ, மாணவிகள் நடத்திய  பேரணியில் கலந்துகொண்டார். 

அப்பொழுது, மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு வீட்டுக்கும் டிஜிட்டல் எண்ணுடன் கூடிய கியூ.ஆர். கோடு டிஜிட்டல் கதவு எண் திட்டத்தை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com