கச்சா எண்ணெய் உற்பத்தி அளவை உயர்த்த முடியாது: சவுதி அரேபியா திட்டவட்டம்

கச்சா எண்ணெய் உற்பத்தி அளவை உடனடியாக உயர்த்த முடியாது என சவுதி அரேபியா, ரஷ்யா ஆகியா நாடுகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. 


கச்சா எண்ணெய் உற்பத்தி அளவை உடனடியாக உயர்த்த முடியாது என சவுதி அரேபியா, ரஷ்யா ஆகியா நாடுகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. 

சில தினங்களுக்கு முன்பு எண்ணெய் வளநாடுகள் உடனடியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்திருந்தார். 

இந்நிலையில், அல்ஜிரிய தலைநகர் அல்ஜியர்சில் நடைபெற்ற எண்ணெய் வள நாடுகள் கூட்டத்தின் முடிவில், தற்போது சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையின் போக்கு திருப்திகரமாக இருந்து வருவதால் அதன் உற்பத்தியை உடனடியாக உயர்த்த முடியாது என்றும் எதிர்காலத்தில் உயத்துவதற்கான வாய்ப்பு உண்டு என அரேபியாவும், ரஷ்யாவும் தெரிவித்துள்ளன. 

அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு எண்ணெய் வள நாடுகள் பணிந்துவிடக் கூடாது என ஈரான் கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com