தாம்பரம்-கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

பயணிகள் வசதிக்காக, தாம்பரம் - கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு சிறப்பு கட்டண ரயில் வரும் 19 -ஆம் தேதி இயக்கப்படவுள்ளது.
தாம்பரம்-கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை: பயணிகள் வசதிக்காக, தாம்பரம் - கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு சிறப்பு கட்டண ரயில் வரும் 19 -ஆம் தேதி இயக்கப்படவுள்ளது.

தாம்பரத்தில் இருந்து ஜூன் 19ஆம் தேதி இரவு 10.20 மணிக்கு புறறப்படும் இந்த ரயில்(06039), மறுநாள் பிற்பகல் 2.40 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும். இந்த ரயிலில் மூன்றடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட ஒரு பெட்டியும், தூங்கும் வசதி கொண்ட ஆறு இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் ஒன்பதும் இணைக்கப்படவுள்ளன.

இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் டவுன், திருவனந்தபுரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com