தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது உண்மை அதை நிரப்பவே வந்துள்ளேன்: ரஜினிகாந்த்

வேலப்பன்சாவடி எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் சிலையை திறந்து வைத்தார் நடிகர் ரஜினிகாந்த்
தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது உண்மை அதை நிரப்பவே வந்துள்ளேன்: ரஜினிகாந்த்

வேலப்பன்சாவடி எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் சிலையை திறந்து வைத்தார் நடிகர் ரஜினிகாந்த் வேலப்பன்சாவடி எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் சிலையை திறந்து வைத்தார் நடிகர் ரஜினிகாந்த் 

சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏசிஎஸ் கல்லூரியில் நடந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர் பல்கலைக்கழக விழா, கட்சி மாநாடு போல மாறிவிட்டது. அரசியல் பாதை  பூ பாதை அல்ல. முள், கல், பாம்புகள் உள்ள பாதை எனக்கும் தெரியும். 

அரசியவாதிகள் தங்களது வேலையை சரியாக செய்யவில்லை என அவர் குற்றம் சாட்டினார். மேலும் கலைஞர், மூப்பனார் போன்றவர்களுடன் பழகி தான் அரசியல் கற்றுக்கொண்டேன். தன்னை யாரும் ரத்தினக் கம்பளம் விரித்து வாழ்த்த வேண்டும் என்று விரும்பவில்லை.

ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசியல்வாதிகள் தங்கள் வேலையை சரியாக செய்யாததால் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். அரசியலுக்கு வந்துள்ள என்னை வாழ்த்த வேண்டிய அவசியமில்லை ஏன் ஏளனம் செய்கிறீர்கள்? கட்சியை அறிவிக்கும் முன்பே கொள்கை என்ன என்று கேட்பது பெண் பார்க்க செல்லும் முன் திருமண பத்திரிகை எங்கே என்று கேட்பதுபோல் உள்ளது. 

தமிழகத்தில் தலைவனுக்கும் தலைமைக்கும் வெற்றிடம் உள்ளது. தலைவர்கள் என்றால் ஜெயலலிதாவும், கருணாநிதியும் மட்டுமே, இந்தியாவிலேயே கட்சியை கட்டுப்பாட்டுடன், நல்ல ஆளுமையுடன் வைத்திருந்தவர் ஜெயலலிதா.  13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கட்சியை கட்டிக்காத்தவர் திமுக தலைவர் கருணாநிதி. திமுக தலைவர் கருணாநிதி போன்ற சிறந்த அரசியல்வாதி நாட்டில் கிடையாது அவர்களின் வெற்றிடத்தை நிரப்பவே வருகிறேன். என்னால் எம்ஜிஆராக முடியாது எம்ஜிஆர் கொடுத்த அதே ஆட்சியை என்னாலும் கொடுக்க முடியும்.  இனிமேல்தான் ஆன்மிக அரசியலை பார்க்கப்போகிறீர்கள். தூய்மைதான் ஆன்மிக அரசியல். நம் பக்கம் ஆண்டவனே இருக்கிறான்.  

எனக்கும், எம்ஜிஆருக்கும் இடையோன உறவை கூற விரும்பினேன், ஆனால் காலம் அமையவில்லை. இப்போது அதற்கான சந்தர்ப்பம் அமைந்துள்ளது நான் இன்று வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்கு காரணம் எம்ஜிஆர்தான். எம்ஜிஆர் போன்ற ஒரு தலைவர் இனி உருவாக முடியாது; எம்ஜிஆர் ஒரு தெய்வ பிறவி. எம்ஜிஆரை நான் முதன்முதலாக பார்த்தபோது சூரியன் போல இருப்பவருக்கு யார் சந்திரன் என்று பெயர் வைத்தார்கள் என்று யோசித்தேன் என்று கூறினார். 

மேலும் தமிழ் பேசினால் மட்டும் தமிழ் வளராது, தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும். அப்துல் கலாம், சுந்தர் பிச்சையால் தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை.  மாணவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள், அதுதான் முக்கியம். படிக்கும் காலத்தில் அரசியலுக்கு வரவேண்டாம் ஆனால் அரசியலை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com