மோடி கூட்டத்திற்காக அறிவிப்பை தள்ளி வைக்கிறது தேர்தல் ஆணையம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடியின் கூட்டத்திற்காக அறிவிப்பை தள்ளி வைக்கிறது என்று தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டியது, ஆனால்,
மோடி கூட்டத்திற்காக அறிவிப்பை தள்ளி வைக்கிறது தேர்தல் ஆணையம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் கூட்டத்திற்காக அறிவிப்பை தள்ளி வைக்கிறது என்று தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டியது, ஆனால், தேர்தல் ஆணையம் இதை மறுத்துள்ளது.

மிசோரம் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைப் பதவிக்காலம் ஜனவரியில் முடிவடைகிறது. ஆகையால், அம்மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பரில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மேற்கூறிய  நான்கு மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிப்புகள் இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. ஆனால், தேர்தல் ஆணையரின் செய்தியாளர் சந்திப்பு மாலை 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக் கூட்டத்திற்காக தேர்தல் அறிவிப்பை ஆணையம் தள்ளி வைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. 

இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்வாலா, பிரதமர் மோடி 1 மணிக்கு ராஜஸ்தானின் அஜ்மீர் நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள நிலையில், மாலை 3 மணிக்கு தேர்தல் அறிவிப்புகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதான் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமா?” இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள தேர்தல் ஆணையம், ”செய்தியாளர்கள் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் அரங்கத்திற்கு வருகை தருவதற்கும், செய்தி ஒளிபரப்பு உபகரணங்களை ஏற்பாடு செய்ய போதிய நேரம் வழங்கவே, செய்தியாளர் சந்திப்பு நேரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 

மாலை 3 மணிக்கான தேர்தல் ஆணைய அறிவிப்பில், சத்தீஸ்கர் மாநிலத்துக்கு இரண்டு கட்டங்களாகவும், மத்தியப் பிரதேசம், மிசோரம் மாநிலங்களுக்கு நவம்பர் 28-ஆம் தேதி ஒரே கட்டமாகவும், ராஜஸ்தான், தெலங்கானாவுக்கு டிசம்பர் 7-ஆம் தேதி ஒரே கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்றும் 5 மாநிலங்களுக்கும் நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 11-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com