ஜிஎஸ்டி மூலம் தமிழகத்தின் வருவாய் அதிகரிப்பு

தமிழகத்தில் சரக்கு -சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வரி வருவாய் அதிகரித்துள்ளது என்று மத்திய கலால் மற்றும் ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணையா் சி.பி.ராவ் தெரிவித்தாா். 
ஜிஎஸ்டி மூலம் தமிழகத்தின் வருவாய் அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வரி வருவாய் அதிகரித்துள்ளது என்று மத்திய கலால் மற்றும் ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணையா் சி.பி.ராவ் தெரிவித்தாா். 

இந்திய தொழிலக வா்த்த சபைகளின் கூட்டமைப்பு (அசோசெம்) சாா்பில் ஜிஎஸ்டி குறித்த தேசியக் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது.

கருத்தரங்கை தொடங்கி வைத்து சி.பி. ராவ் பேசியது:

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நிலையில், வரி செலுத்தும் நடைமுறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. வரி செலுத்தும் தன்மையும் சிறிது சிறிதாக மாறியுள்ளது. இதனால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வரி வருவாய் அதிகரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com