உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை: விரக்தியில் பொதுமக்கள்!

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 
உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை: விரக்தியில் பொதுமக்கள்!


இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் லிட்டருக்கு ஒற்றை இலக்க பைசா அளவில் 2 பைசா, 5 பைசா என்ற அளவில் உயர்த்தப்பட்டு வந்தது. அதே அளவு அவ்வப்போது குறைக்கப்பட்டும் வந்தது. சமீப காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இரட்டை இலக்க பைசாக்களில் 25 காசு, 40 காசு என்ற அளவில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது. 

தினந்தோறும் பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் இந்தப் பிரச்னைக்கு தீர்வுகாணும் விதமாக மத்திய, மாநில அரசுகள் விதித்து வரும் கலால் வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரியை (வாட்) குறைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனை வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் திங்கள்கிழமை நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டமும் நடைபெற்றது.

ஆனால், கலால் வரியைக் குறைத்தால் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும். நிதிப் பற்றாக்குறையை குறைக்கும் இலக்கையும் எட்ட முடியாது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியை எண்ணெய் வள நாடுகள் குறைத்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்தது ஆகியவைதான் இப்போதைய விலை உயர்வுக்கு முக்கியக் காரணம். இந்தப் பிரச்னை விரைவில் தானாகவே சரியாகிவிடும்.

கலால் வரியைக் குறைப்பது அரசுப் பணிகளில் சிக்கலை ஏற்படுத்தும், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்க முடியாத நிலை உருவாகும். இதுவும் மக்களுக்கான நேரடி பாதிப்புதான் என்று அவர்கள் தெரிவித்தனர்.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வரும் நிலையிலும், அவற்றின் மீதான கலால் வரியை குறைப்பதில்லை என்ற முடிவில் மத்திய அரசு தொடர்ந்து உறுதியாக உள்ள நிலையில், சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 14 காசுகள் அதிகிரித்து லிட்டருக்கு ரூ.84.05 ஆகவும், டீசல் 15 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் ரூ.77.13 ஆகவும் விற்பனை ஆகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com