தொழில் முனைவோருக்‍கு உள்ள தடைகளை மத்திய, மாநில அரசுகள் நீக்‍க வேண்டும்: இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி

தொழில் முனைவோருக்‍கு உள்ள தடைகளை நீக்‍கி வேலைவாய்ப்பை அதிகரிக்‍க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி
தொழில் முனைவோருக்‍கு உள்ள தடைகளை மத்திய, மாநில அரசுகள் நீக்‍க வேண்டும்: இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி


தொழில் முனைவோருக்‍கு உள்ள தடைகளை நீக்‍கி வேலைவாய்ப்பை அதிகரிக்‍க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி வலியுறுத்தி உள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் மக்களுடான நெருக்‍கம் அதிகரிக்க வேண்டும். குடிமக்கள் சார்ந்து அரசு செயல்பட வேண்டும். அரசின் கொள்கைகள் ஜனரஞ்சகமாக இல்லாமல், நிபுணத்துவம் உள்ளதாக அமைய வேண்டும். தொழில் முனைவோருக்‍கு உள்ள தடைகளை தகர்த்து வேலைவாய்ப்பை அதிகரிக்‍க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்.

உலகின் மென்பொருள் மேம்பாட்டு மையமாக இந்தியா மாறியுள்ளதாகவும், நாட்டின் நடப்பாண்டு பொருளாதாரம் 6 முதல் 7 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடைந்து வருவதாகவும், நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 400 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. முதலீட்டாளர்களின் நம்பிக்கை முன்பைவிட தற்போது அதிகமாக உள்ளதாக கூறியவர், நாட்டில் தனியார் துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க தடையை அகற்றவும், தொழில் முனைவோருக்‍கு உள்ள தடைகளை நீக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

'மேரா பாரத் மகான்' அல்லது 'ஜெய் ஹோ' என்று கூச்சலிடுவது எளிதானது என்றாலும், அதற்கான மதிப்புகளைக் கடைப்பிடிப்பது கடினம் என்றும் தெரிவித்த அவர், சாதி, மதம் மற்றும் மாநிலம் கடந்து, இந்தியர்களாக நம்மை அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொழில்துறை அமைப்பு சியாம் ஆய்வின்படி, நாட்டில் வாகனங்களின் விற்பனை ஜூலை மாதத்தில் 30.98 சதவீதம் சரிந்தது. இது டிசம்பர் 2000 முதல் பதிவு செய்யப்பட்ட மிக மோசமான சரிவைக் குறிக்கிறது, தற்போது அது விற்கும் வாகனங்களில் ஐந்தில் ஒரு பகுதியை தான் விற்பனை செய்து வருகிறது.

ஆட்டோமொபைல் உபகரண உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராம் வெங்கடரமணி கூறுகையில், வாகனத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி கணிக்கமுடியாதது. வாகன உற்பத்தியாளர்களால் உற்பத்தியில் 15-20 சதவீதம் குறைந்துள்ளது. ஆட்டோமொபைல் உற்பத்தி குறைவு நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது.

"பெரும்பாலான வாகன தயாரிப்பாளர்கள் வேலை நாட்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருவதன் மூலமும், தொழிலாளர்களைத் திரும்பப் பெறுவதன் மூலமும் சரிவை நிர்வகித்து வருகினறனர். இதே போக்கு தொடர்ந்தால், 10 லட்சம் பேர் பணியை இழப்பு செய்யப்படலாம்" என்று கூறியிருந்தது. 

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வளர்ச்சி "ஒப்பீட்டளவில் மெதுவாக" இருக்கும் என்று அரசாங்கம் கூறியுள்ள நிலையில், பல பொருளாதார வல்லுநர்கள் 2020 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் நிதியாண்டிற்கான தங்கள் கணிப்புகளைக் குறைத்துள்ளனர்.

இந்த மாத தொடக்கத்தில், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஜூன் மாத கொள்கையில் 7 சதவீத முன்னறிவிப்பிலிருந்து 2019-20 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி திட்டத்தை 6.9 சதவீதமாகக் குறைத்தது.

ஒட்டுமொத்த தேவையை அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சி கவலைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் மத்திய வங்கி கோடிட்டுக் காட்டியது. இந்த ஆண்டு இதுவரை முக்கிய வட்டி விகிதங்களின் அடிப்படை புள்ளிகள் 110  (1.1 சதவீதம்) குறைத்துள்ளது.

ஆட்டோமொபைல்கள் போன்ற துறைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து நிதி ஊக்கத்திற்கான அழைப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றன.

தனியார் துறையில் அரசாங்கத்தின் தலையீடு ஒரு தார்மீக ஆபத்தை உருவாக்குகிறது என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

மேலும் "ஒவ்வொரு முறையும் தொழில்துறை சூரிய அஸ்தமன கட்டத்தில் இருக்கும்போது அரசாங்கம் தலையிட்டு வரி செலுத்துவோர் பணத்தை திறம்பட பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com