ப.சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் கோரிக்கையை நிராகரித்தது தில்லி உயர்நீதிமன்றம்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் சிகிச்சை பெறுவதற்கதாக 3 நாள் இடைக்கால ஜாமீன் கோரி முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் தாக்கல்
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் சிகிச்சை பெறுவதற்கதாக 3 நாள் இடைக்கால ஜாமீன் கோரி முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் தாக்கல் செய்த கோரிக்கை மனுவை நிராகரித்த தில்லி உயர்நீதிமன்றம், வருகிற 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், பிறகு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட அமலாக்கத்துறைக் காவல் இன்றுடன் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து, மேலும், ஒரு நாள் காவலை நீட்டித்து தருமாறு, அமலாக்கத்துறை சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், வருகிற 13 ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டது.

இதனிடையே, தில்லி உயர்நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி டி.என். பாட்டீல், நீதிபதி ஹரி சங்கர் அமர்வு முன்பு, தனது உடல்நிலையை காரணம் காட்டி, ப.சிதம்பரம் தரப்பில் 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் கோரப்பட்டது.

சிதம்பரத்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும். சிதம்பரம் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவரது உடல் எடை 73 கிலோவில் இருந்து 66 ஆக குறைந்துள்ளது. இதனால் அவருக்கு முறையான சிகிச்சை தேவைப்படுகிறது. சிகிச்சைக்காக அவர் ஹைதராபாத் செல்ல 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என சிதம்பரம் தரப்பு வழக்குறைஞர் கபில் சிபல் நீதிமன்றத்தில் வாதிட்டார். 

சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்ட உயர்நீதிமன்றம், எய்ம்ஸ் மருத்துவருடன் இணைந்து சிதம்பரத்தின் குடும்ப மருத்துவர் நாகேஸ்வர் ரெட்டி (ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர்) அடங்கிய மருத்துவக் குழுவை அமைத்து சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்ட தில்லி உயர் நீதிமன்றம், சிதம்பரத்தின் உடல்நலப் பிரச்னைகள் குறித்து எய்ம்ஸ் மருத்துவ வாரியம் நாளை வெள்ளிக்கிழமை அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது. 

மே லும்இந்த மனு, உரிய விசாரணை அமர்வில், பட்டியலிடப்படும் என தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. ஏற்கனவே, அமாலக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, வருகிற 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் 2007-இல் பதவி வகித்த போது, வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதியை ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் பெறுவதற்கு அவரது அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அந்நிய முதலீட்டு மேம்பாடு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதைத் தொடா்ந்து, சிதம்பரத்திற்கு எதிராக சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தொடா்பான வழக்கை 2017, மே 15-இல் அமலாக்கத் துறை பதிவு செய்தது. இந்தவழக்கில் அக்டோபா் 16-இல் அமலாக்கத் துறையின் அதிகாரிகள் தில்லி திகார் சிறையில் சிதம்பரத்தை கைது செய்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com