காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து: பலன் என்ன?

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370வது மற்றும் 35ஏ பிரிவு ரத்து செய்யப்படும் என அறிவிப்பு
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து: பலன் என்ன?

 
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370வது மற்றும் 35ஏ பிரிவு ரத்து செய்யப்படும் என அறிவிப்பு குடியரசுத் தலைவர் கையெழுத்துடன் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 

காஷ்மீர் தொடர்பான மூன்று முக்கிய அறிவிப்புகள்: 

  1. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370வது சட்டப்பிரிவு நீக்கம்.
  2. சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் மாற்றப்படும்.
  3. லடாக் பிராந்தியம் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றப்படும்.

பலன் என்ன? 

  • சிறப்பு அந்தஸ்து ரத்தால் காஷ்மீரில் இந்தியாவின் பிற பகுதி மக்களும் சொத்துகள் வாங்க முடியும்.
  • சிறப்பு அந்தஸ்து ரத்தால் காஷ்மீர் பெண்கள் பிற மாநில ஆண்களை திருமணம் செய்தாலும் சொத்துரிமை கோர முடியும்.
  • சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டால் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் அனைத்து சட்டங்களும் காஷ்மீருக்கும் இனி பொருந்தும்.
  • சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டால் காஷ்மீரின் எல்லைகளை மத்திய அரசால் மாற்றி அமைக்க முடியும்.
  • சிறப்பு அந்தஸ்தின் மூலம் காஷ்மீரின் நிரந்தர குடிமக்களை அம்மாநில சட்டப்பேரவை மட்டுமே தீர்மானிக்க முடியும்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்கிற அறிவிப்பை தொடர்ந்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டது.  முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் காஷ்மீர் இடஒதுக்கீடு மசோதா அறிமுகம் செய்யப்படுவதாக எதிர்கட்சிகள் புகார்

மசோதா அறிமுகம் மட்டுமே செய்யப்படுகிறது. உறுப்பினர்கள் படித்துப்பார்க்க அவகாசம் கொடுத்து பிறகு நிறைவேற்றப்படும் என மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார். 

வைகோ: காஷ்மீர் இரண்டாக பிரிப்பது, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது அவசர நிலை பிரகடனம் போன்றது. அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. நாடாளுமன்றத்திலேயே ஜனநாயக படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஜனநாயக படுகொலை என வைகோ எதிர்ப்பு தெரிவித்து ஆவேசமாக பேசினார். 

வெங்கய்ய நாயுடு: வெங்கய்ய நாயுடு: இதற்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, எமெர்ஜென்சி இல்லை அர்ஜென்சி அதாவது அவசரம் என்றும் கூறியதோடு, இதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் வைகோ என பதிலளித்தார். 

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி: அமித் ஷா அறிவிப்பு மூலம் மிகப்பெரிய வரலாற்று தவறு சரி செய்யப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்த நேருவின் தவறை தற்போதைய மோடி அரசு சரி செய்துள்ளது என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com