நீலகிரி மாவட்டம் பைக்காராவில் நிலச்சரிவு சரிவு: 8 வயது சிறுமி பலி

நீலகிரி மாவட்டம் பைக்காராவில் ஏற்பட்ட நிலச்சரிவு சரிவில் சிக்கி 8 வயது சிறுமி காவ்யா உயிரிழந்துள்ளார். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 
நீலகிரி மாவட்டம் பைக்காராவில் நிலச்சரிவு சரிவு: 8 வயது சிறுமி பலி


நீலகிரி மாவட்டம் பைக்காராவில் ஏற்பட்ட நிலச்சரிவு சரிவில் சிக்கி 8 வயது சிறுமி காவ்யா உயிரிழந்துள்ளார். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 

நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சி பகுதியில் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 82 செ.மீ. மழை பெய்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்து 8ஆவது நாளாக இன்று வெள்ளிக்கிழமையும் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. காற்றுடன் கூடிய பலத்த மழை காரணமாக ஆங்காங்கே சாலையோர மரங்கள் விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்தில் அவ்வப்போது பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சாலைகளில் விழுந்துள்ள மரங்களை வனத் துறையினர், நெடுஞ்சாலைத்  துறையினர் உடனுக்குடன் அகற்றி வருகின்றனர். 

மின்சாரம் இல்லாததால் செல்லிடப்பேசி சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் 24 மணி நேரமும் பேரிடர் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கூடலூர், பந்தலூர் வட்டங்களில் கோட்டாட்சியர் கே.வி.ராஜ்குமார் மேற்பார்வையில் வருவாய்த் துறையினர் மீட்புப் பணிகளை செய்து வருகின்றனர். 

இந்நிலையில், பைக்காராவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 வயது சிறுமி காவ்யா உயிரிழந்துள்ளார். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில், முதல்வரின் உத்தரவுப்படி, மழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்திற்கு வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், பேரிடர் மேலாண்மை இயக்குநர் ஜெகன்நாதன் உள்ளிட்டோர் அடங்கிய குழு நீலகிரிக்கு விரைந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com