சுடச்சுட

  

  கொள்ளையரை விரட்டியடித்த நெல்லை தம்பதிக்கு வீர தீர விருது வழங்க பரிந்துரை

  By DIN  |   Published on : 14th August 2019 12:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tirunelveli old couple

   

  திருநெல்வேலி: கொள்ளையரை விரட்டியடித்த நெல்லை தம்பதிக்கு வீர தீர செயலுக்கான விருது வழங்க தமிழக அரசுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்திருப்பதாக தகவல்

  கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்த சண்முகவேலுவின் பண்ணைத் தோட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஆயுதங்களுடன் புகுந்த முகமூடிக் கொள்ளையர்களை சண்முகவேலு, அவரது மனைவி செந்தாமரை ஆகியோர் துணிச்சலுடன் போராடி விரட்டியடித்தனர். அவரது வீட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. 

  இந்தத் தம்பதியை ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்களும் சமூக வலைதளங்களில் பாராட்டியுள்ளனர்.  இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார் நேற்று செவ்வாய்க்கிழமை காலை சண்முகவேலு வீட்டுக்குச் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது, சண்முகவேலு, செந்தாமரை தம்பதியைப் பார்த்து, உங்கள் துணிவும், துரிதமான செயல்பாடும் அனைவருக்கும் வேண்டும். நீங்கள் இந்த நிகழ்வின் மூலம் பலருக்கும் முன்னுதாரணமாக உள்ளீர்கள் என்று பாராட்டினார்.

  ஆய்வின்போது கடையம் காவல் ஆய்வாளர் ஆதிலட்சுமி மற்றும் போலீஸார் உடனிருந்தனர். கொள்ளையர்களைப் பிடிக்க டி.எஸ்.பி. ஜாகீர் உசைன் தலைமையில் 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

  இந்நிலையில், கொள்ளையர்களை விரட்டியடித்த சண்முகவேலு - செந்தாமரை தம்பதிக்கு வீர தீர விருது வழங்க தமிழக அரசுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai