ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்று பேச மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 42ஆவது கூட்டத்தில் பங்கேற்று பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஐக்கிய நாடுகள் சபை
ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்று பேச மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

ஜெனிவா: மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 42ஆவது கூட்டத்தில் பங்கேற்று பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்புவிடுத்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளுடைய மனித உரிமைகளைப் பேணவும், அந்த நாடுகளை வளர்ச்சியை நோக்கிய பாதையில் இட்டுச்செல்லவும் மனித உரிமைகள் ஆணைக்குழு, ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டு 1948 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது.

ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்று பேச திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. அடுத்த மாதம் 9-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது. 

இந்நிலையில், ஜெனிவாவில் 42ஆவது மனித உரிமை ஆணையக் கூட்டம் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துக் கொள்கின்றனர். இதில் பங்கேற்று பேசுவுதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டானுக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது. 

கூட்டத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. 

இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றால் ஈழத்தமிழர்களின் நிலை, காஷ்மீர் சீர்திருத்தம் போன்ற பிரச்னைகளை குறித்து முன்னெடுத்து பேசுவார் என கூறப்படுகிறது. எனினும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திமுக தலைமை இன்னும் வெளியிடவில்லை.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் நடப்புத் தலைவராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த தமிழரான நவநீதம் பிள்ளை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com