ஏர் இந்தியாவை முற்றிலும் தனியார்மயமாக்க தயார்: விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு 

ஏர் இந்தியாவை முற்றிலும் தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியாவை முற்றிலும் தனியார்மயமாக்க தயார்: விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு 

ஏர் இந்தியாவை முற்றிலும் தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம், ந‌‌ஷ்டத்தில் இருந்து வருகிறது. கடந்த 2018-19 நிதி ஆண்டில் இந்த நிறுவனம், ரூ.7,600 கோடி ந‌‌ஷ்டத்தை சந்தித்து உள்ளது. இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை முற்றிலும் தனியார் மயமாக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முதல்தர விமான நிறுவனமாக ஏர் இந்தியா திகழ்கிறது. விமானங்களை மத்திய அரசு நடத்தக் கூடாது என்றே விரும்புவதாகவும், ஏர் இந்தியாவை முற்றிலும் தனியாரே நடத்த வேண்டும். மிகவும் சிறந்த திட்டத்தை மிகவும் குறுகிய காலத்தில் செயல்படுத்த மத்திய அரசு விரும்புவதாகவும், இந்தியா நிறுவனத்தை முற்றிலும் தனியார் மயமாக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. .

மேலும், ந‌‌ஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுழனத்தின் 95% பங்குகளை விற்பதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை செயலாளர் பி.கே.சின்ஹா ​​தலைமையிலான செயலாளர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், விமான முதலீட்டுத் திட்டம் குறித்து விரைவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அமைச்சரவையின் முன் வைக்கப்படலாம் என்றும், நல்ல ஒரு இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்றார்.

ஏர் இந்தியாவை நடத்த பலரும் மிக ஆர்வமாக உள்ளனர். அவர்களில் ஒருவர் பெறுவார் என்றும் ஹர்தீப் சிங் பூரி கூறினார். 

மோடி அரசு ஏற்கனவே விமான சேவையை விற்பனை செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டதும், விற்பனையுடன் தொடர்புடைய நிபந்தனைகள் காரணமாக இந்த முயற்சி வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com