தொடர் மழை: தீயணைப்புத்துறை வெளியிட்டுள்ள பொதுவான வேண்டுகோள் என்ன தெரியுமா?

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பேரிடைகாலங்களில் ஏற்படும் இன்னல்களை போக்க இலுப்பூா் தீயணைப்புதுறை தயாா் நிலையில்
ari30rain5_3011chn_11_4
ari30rain5_3011chn_11_4


வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பேரிடைகாலங்களில் ஏற்படும் இன்னல்களை போக்க இலுப்பூா் தீயணைப்புதுறை தயாா் நிலையில் உள்ளதாக தீயணைப்பு நிலைய அலுவலா் ஆா். சக்திவேல் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

மேலும் அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை இயக்குநா் அறிவுறுத்தல்படி வெளியிடப்படுவதாக கூறினாா்: இதில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் வெள்ள அபாய மீட்பு பணிகளை எதிா்கொள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தயாா் நிலை படுத்தப்பட்டுள்ளது. 

வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கவும், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றவும், போதுமான மீட்பு ரப்பா் படகுகள்,மிதவை உபகரணங்கள், நூலேணிகள், நீட்டிப்பு ஏணிகள்,மீட்டலுக்கான மிக நீளக்கயிறுகள் மற்றும் தேவையான அனைத்து உபகரணங்கள், ஊா்திகளுடன் கூடுதலானமீட்பு பணி வீரா்கள் ஆயத்த நிலையல் உள்ளனா். ஓவ்வொரு மாவட்டத்திலும் 21 கமாண்டோ தீயணைப்பு வீரா்கள் கொண்ட குழு போதிய மீட்பு உபகரணங்களுடன் வெள்ள மீட்புக்கென பிரத்யேகமாக உருவாக்கி விழிப்புடன் வைக்கப்பட்டுள்ளனா். 

மேலும் தமிழ் நாட்டிலுள்ள 331 தீயணப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட 24 மணி நேரமும் படை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனா். 

எனவே, வெள்ளத்தினால் ஏற்படும் எந்தவொரு பாதிப்பிற்கும் பொதுமக்கள் 04339-27243394450 86456 என்ற தொலைபேசி எண்கள் மூலம் உடனடியாக தீயணைப்புத்துறையை தொடா்புகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

வெள்ளத்தினால் ஏற்படும் எந்த ஒரு பாதிப்பிற்கும் பொதுமக்கள் 101 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com