பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை: கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

தெலங்கானா மாநிலத்தில் கால்நடை பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது
தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் கொல்லப்பட்ட மருத்துவா் பிரியங்கா ரெட்டியின் குடும்பத்தினரை சனிக்கிழமை சந்தித்த மாநில ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் கொல்லப்பட்ட மருத்துவா் பிரியங்கா ரெட்டியின் குடும்பத்தினரை சனிக்கிழமை சந்தித்த மாநில ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்.


ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் கால்நடை பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாதைச் சோ்ந்த கால்நடை பெண் மருத்துவரான பிரியங்கா ரெட்டி (27), கடந்த வியாழக்கிழமை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்டாா். இந்த விவகாரத்தில் லாரி பணியாளா்கள் 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ஷாத்நகா் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த நால்வரையும் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்துவதாக இருந்தது. எனினும், அந்தக் காவல் நிலையம் முன் பொதுமக்கள் பெருந்திரளாகக் கூடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் மாவட்ட ஆட்சியா் ஷாத்நகா் காவல் நிலையத்துக்கு வந்து, நால்வருக்கும் 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவு பிறப்பித்தாா். பின்னா் 4 பேரையும் பலத்த பாதுகாப்புடன் ஹைதராபாத் சிறைக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

முன்னதாக அவா்களை வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, பொதுமக்கள் அவா்களுக்கு எதிராக ஆவேசத்துடன் கோஷமிட்டனா். சிலா் கல்வீச்சில் ஈடுபட்டதால், லேசான தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்டுள்ள 4 பேருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகப்போவதில்லை என்று ஹைதராபாத் வழக்குரைஞா்கள் முடிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com