விவசாயிகளுக்கு 7% வட்டியில் நகைக்கடன் வழங்கக்கூடாது: மத்திய அரசு அதிரடி

விவசாயிகளுக்கு 7% வட்டியில் விவசாய நகைக்கடன் வழங்கக்கூடாது என வங்கிகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.  
விவசாயிகளுக்கு 7% வட்டியில் நகைக்கடன் வழங்கக்கூடாது: மத்திய அரசு அதிரடி


புதுதில்லி: விவசாயிகளுக்கு 7% வட்டியில் விவசாய நகைக்கடன் வழங்கக்கூடாது என வங்கிகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.  

இதுதொடர்பாக மத்திய வேளாண்துறை அமைச்சகம் வங்கிகளுக்கு வழங்கியுள்ள உத்தரவில்,   விவசாயிகளாக இல்லாதவர்களுக்கும் 7% வட்டியில் விவசா நகைக்கடன் பெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் 11 சதவீத நகைக்கடன் வட்டியில் வழங்கப்பட்டு வந்த 4% மானியம் இத்துடன் நிறுத்தப்படுகிறது. அக்டோபர் 1 முதல் வழங்கப்பட்ட விவசாய நகைக்கடன் வட்டியை உயர்த்தி, வரும் 2020 ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் வசூலிக்க வேண்டும். 

மேலும், விவசாயிகளுக்கான விவசாய நகைக்கடனுக்கான வட்டியை 7% இருந்து 9.25% முதல் 11% வரை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால கடனுக்கான 9.25% வட்டியும், ரூ.3 லட்சத்திற்கு மேலான கடனுக்கு 9.50% வட்டியையும் வசூலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. 

மத்திய அரசின் அதிரடி உத்தரவு விவசாயிகளை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com