வடகிழக்கு மாநிலங்கள் முன்னேறினால்தான் நாடு முன்னேறும்:  மோடி பேச்சு

இந்தியா தனது முழு சக்தியால் மட்டுமே வளர முடியும் என்று நான் மீண்டும் மீண்டும் கூறியிருக்கிறேன். அருணாச்சல பிரதேசம் தண்ணீர் தேசமாக 
வடகிழக்கு மாநிலங்கள் முன்னேறினால்தான் நாடு முன்னேறும்:  மோடி பேச்சு


இடாநகர்: வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி பெற்றால் மட்டுமே, புதிய இந்தியாவை உருவாக்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இரண்டு பயணமாக அசாம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசங்களில் பிரச்சாரங்களில் சில திட்டங்களை தொடங்கி வைத்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். 

இன்று அருணாச்சல பிரதேசத்தில் சில திட்டங்களையும் தொடங்கி வைத்த மோடி, அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான மேடையில் பேசுகையில், அருணாச்சல் சூரிய உதயத்தின் நிலம். இவ்விடம் நமக்கு உறுதியை கொடுக்கிறது. அருணாச்சல பிரதேசத்தை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலத்தின் போக்குவரத்து, மருத்துவத்தை மேம்படுத்த ஏதுவாக மத்திய அரசு ரூ.13 ஆயிரம் கோடி செலவில் பல நலத்திட்டங்களை வழங்க உள்ளது. 

இந்தியா தனது முழு சக்தியால் மட்டுமே வளர முடியும் என்று நான் மீண்டும் மீண்டும் கூறியிருக்கிறேன். அருணாச்சல பிரதேசம் தண்ணீர் தேசமாக இருக்கிறது. இது இம்மாநிலத்தின் கொடை. இந்தத் தண்ணீர் சக்தியை வைத்து மின்சாரம் தயாரித்து அனைத்து குடும்பங்களுக்கும் நூறு சதவீதம் மின்சாரம் அளிக்கலாம். ஆனால் முந்தைய அரசு அப்படி ஏதும் செய்யவில்லை. அவர்கள் இம்மாநிலத்தை புறக்கணித்தார்கள். நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி பெற்றால் மட்டுமே, நாடு முன்னேறும். புதிய இந்தியாவை உருவாக்க முடியும். வடகிழக்கை முன்னேற்றவே நாங்கள் பாடுபடுகிறோம். கடந்த நான்கரை ஆண்டுகளில் அருணாச்சல மற்றும் வடகிழக்கு மாநில வளர்ச்சியில் எந்தவொரு நிதி பற்றாக்குறையோ அனுமதிக்கவில்லை.

அருணாச்சல பிரதேசத்துக்கு பாஜக அரசு இரண்டு விமான நிலையங்களை கொடுத்துள்ளது. அது மட்டுமல்லாமல் ரூ.4000 கோடி செலவில் சாலை மார்க்கமாகவும், ரயில் மார்க்கமாவும் அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் எல்லா பகுதிகளுடன் இணைத்திருக்கிறோம். ஏற்கனவே இடாநகருக்கு ரயில் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் ஆயிரம் கிராமங்கள் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன. இம்மாநிலம் நாட்டின் பாதுகாப்பு நுழைவு வாயிலாக உள்ளது. இதனை மேம்படுத்தவே நாங்கள் நடவடிக்கையை எடுத்து வருகிறோம் என கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com