திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா

திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா
திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா

திருநள்ளாறு: திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலில் குடமுழுக்கு விழா இன்று  நடைபெறுகிறது.

திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, யாகசாலை பூஜைகள் கடந்த வியாழக்கிழமை (பிப்.7) இரவு தொடங்கி, நடைபெற்றுவருன்றன. ஞாயிற்றுக்கிழமை காலை 6-ஆம் கால பூஜையும், இரவு 7-ஆம் கால பூஜையும் நடைபெற்றன.

யாகசாலையில் நிறைவாக 8-ஆம் கால பூஜை திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் தொடங்கி, காலை 7 மணிக்கு மகா பூர்ணாஹுதி செய்யப்படவுள்ளது. காலை 7.20 மணிக்கு பிரதான கும்ப மூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகின்றன. காலை 9.15 முதல் குடமுழுக்காக புனிதநீர் விமான கலசத்தில் ஊற்றும் பணி நடைபெறுகிறது.

இதற்கிடையில், விமானங்களில் கலசங்கள் பொருத்தும் பணி சனிக்கிழமை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா முன்னிலையில் இப்பணி நடைபெற்றது.

யாகசாலை பூஜையில் தருமபுர ஆதீன இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், திருநள்ளாறு கோயில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியரும், நிர்வாக அதிகாரி (கோயில்கள்) பொறுப்பு வகிப்பவருமான ஏ.விக்ரந்த் ராஜா குடமுழுக்கு ஏற்பாடுகளை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு கூறியதாவது:

குடமுழுக்குக்காக காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குடமுழுக்கைக் காண பொதுமக்கள் திரளாக திருநள்ளாறு வரலாம். முற்கால சோழர்களின் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட திருக்கோயில் இது. மூவரால் பாடல் பெற்ற தலம். கோயிலுக்கு பல்வேறு வரலாற்றுச் சிறப்புகள் உள்ளன. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் உரிய காலத்தில் குடமுழுக்கு நடத்தப்படுகிறது.

பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது என்றார் ஆட்சியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com