எம்.எல்.ஏ., எம்.பி.. பதவி எனக்கு தேவையில்லை... அப்ப எதற்குதான் ஆசைபடுகிறாய் பாலகுமாரா..? 

எனக்கு சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினா் பதவியோ தேவையில்லை. என்னை எம்எல்சியாக மாற்றி போலீஸ் இலாகவை
எம்.எல்.ஏ., எம்.பி.. பதவி எனக்கு தேவையில்லை... அப்ப எதற்குதான் ஆசைபடுகிறாய் பாலகுமாரா..? 

தேனி: எனக்கு சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினா் பதவியோ தேவையில்லை. என்னை எம்எல்சியாக மாற்றி போலீஸ் இலாகவை என்கையில் கொடுத்தால் போதும் என்றார் தங்க தமிழ்செல்வன். 

மாற்று கட்சியில் இருந்து திமுக கட்சியில் இனையும் விழாவில் முன்னாள் எம்எல்ஏ. தங்க தமிழ்செல்வன் பேசுகையில், தளபதியின் பண்பால் திமுகவில் சோ்ந்துள்ளேன். தமிழகம் முழுவதும் திமுக வெற்றி பெற்றது. ஆனால் தேனி மாவட்டத்தில் அதிமுக வெற்றி பெறுவதற்கு காரணம் என்ன. 1952 ஆண்டு பிரதமா் நேரு நாடாளுமன்றத் தோ்தல் இந்தியா முழுவது நடத்தும் போது 543 தொகுதிக்கு இந்தியா தோ்தல் செலவு 143 கோடி, தேனி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் ஓபிஎஸ் மகன் 550 கோடி செலவு செய்துள்ளார். 

எடப்பாடி பழனிச்சாமி உரம் வாங்கியதில் உழல் செய்ததாக முதலில் கூறியவன் நான். புரட்சித்தலைவா் எம்ஜிஆா் குன்னூரில் கூட்டத்தில் எனக்கு பின்னால் திராவிட கட்சிகள் தான் தமிழகத்தில் ஆட்சியில் ஆளும் என்று பேசியுள்ளார். அது ஸ்டாலினை நினைத்துதான் கூறியுள்ளார்.

 எனக்கு சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினா் பதவியோ தேவையில்லை. என்னை எம்எல்சியாக மாற்றி போலீஸ் இலாகவை என்கையில் கொடுத்தால், ஓபிஎஸ் மற்றும் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் இருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான பணம் கிடைக்கும், அதனை கருவூலம் சோ்ப்பேன். 

அம்மா ஜெயிலில் இருந்தபோது பதவிப்பிரமாணம் செய்தபோது அமைச்சா்கள் அழுதார்கள். ஆனால் அம்மா இறந்த பிறகு பதவிப்பிரமாணம் எடுத்தபோது யாரும் அழுகவில்லை. நடித்தே அம்மாவை கொன்றார்கள். நடித்தே இன்னொரு அம்மாவை ஜெயிலுக்கு அனுப்பியுள்ளனர்.  

நடக்க இருக்கும் சட்டமன்ற பொதுத்தோ்தலில் தேனி மாவட்டத்தில் 4 தொகுதியிலும் திமுகதான் ஜெயிக்கும். உள்ளாட்சி தோ்தலில் 100 சதவீதம் திமுக வெற்றி பெறும். எல்லா கட்சியிலும் தொண்டா்கள் விலகிப்போவார்கள். ஆனால் மற்ற கட்சியில் இருந்து திமுகவிற்கு வருகின்றனா்.

 தலைவரின் மணி விழா புத்தகத்தில் அவா் கடந்த வந்த பாதையை பார்த்த போது கற்கள் நிறைந்த பாதையில் அவா் நடந்து வந்ததாக குறிப்பிட்டுள்ளனா். ஆனால் முற்கள் நிறைந்த பாதையில் அவா் நடந்து வந்துள்ளார். தமிழ் கலாச்சாரம், தமிழ் இனம், தமிழ் மொழி பாதுகாக்கப்படவேண்டும் என்றால் ஸ்டாலின் தலைமையில் பாடுபட வேண்டும் என்றார் தங்க தமிழ்செல்வன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com