மோடியை விமர்சித்து பேசிய ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பழங்குடியின மக்களை போலீஸார் சுட்டுக்கொல்வதற்கு வகை செய்யும் புதிய சட்டத்தை மோடி இயற்றி உள்ளதாக சர்ச்சைக்குரிய வகையில்
மோடியை விமர்சித்து பேசிய ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்


புதுதில்லி: பழங்குடியின மக்களை போலீஸார் சுட்டுக்கொல்வதற்கு வகை செய்யும் புதிய சட்டத்தை மோடி இயற்றி உள்ளதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

மத்திய பிரதேசத்தில் உள்ள ஷாடோல் பகுதியில் கடந்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பழங்குடியின மக்களுக்கு எதிரான சட்டம் குறித்து பேசி மோடியை விமர்சித்தார். 

அப்போது,  பழங்குடியின மக்களை போலீஸார் சுட்டுக்கொல்வதற்கு வகை செய்யும் புதிய சட்டத்தை மோடி இயற்றியுள்ளார். அந்த சட்டத்தின் படி, பழங்குடியினமக்களை தாக்கலாம், உங்கள் நிலங்களை அவர்கள் பறிக்கலாம், வனங்களை விட்டு வெளியேற்றலாம் , உங்களின் குடிநீரை அபகரிக்கலாம், பழங்குடியினர்களை சுடவும் செய்யலாம் என்று அந்த சட்டம் சொல்கிறது என்று பேசினார். 

ராகுல் காந்தியின் இந்த பேச்சு, தேர்தல் நடத்தை நெறிமுறைகளுக்கு எதிரானது என பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம், 48 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு தெரிவித்துள்ளது. 

தேர்தல் நடத்தை நெறிமுறைகளின்படி, கட்சித் தலைவர்களோ, வேட்பாளர்களோ எதிர் தரப்பினர் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சிக்கக் கூடாது என்பதை அந்த நோட்டீஸில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. குறித்த அவகாசத்துக்குள் அந்த நோட்டீஸுக்கு ராகுல் பதிலளிக்காவிட்டால், அடுத்த அறிவிப்பின்றி தேர்தல் ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்க இயலும். 

தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து ராகுல் காந்தி தற்போது வரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. 

Election Commission issues a notice to Congress President Rahul Gandhi & seeks a reply within 48 hours, for violating model code of conduct by saying "Narendra Modi has made a new law in which there is a line that says tribals can be shot at", at a rally in Shahdol,Madhya Pradesh.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com