ரஜினிகாந்த்துடன் ஏ.சி.சண்முகம் சந்திப்பு
By DIN | Published On : 18th May 2019 02:31 AM | Last Updated : 18th May 2019 02:31 AM | அ+அ அ- |

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்துடன் வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரும், புதிய நீதிக் கட்சித் தலைவருமான ஏ.சி.சண்முகம் வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினார்.
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த்தின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, இன்றைய அரசியல் சூழல், தேர்தலுக்குப் பிந்தைய நிலவரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் முடிவும், சட்டப்பேரவை இடைத் தேர்தல் முடிவுகளும் விரைவில் வெளிவர உள்ள நிலையில், இவர்களின் சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.