மக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் தோல்வியை தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்!

மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று சாதனை
மக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் தோல்வியை தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்!


மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 39 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று வியாழக்கிழமை (மே 23) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட கூட்டணி 39 தொகுதிகளில் 38 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.  

அதேசமயம், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்ட துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்தரநாத் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய அளவிலான வெற்றியை திமுக கூட்டணி பெற்றுள்ளது.

வெற்றி நிலவரம்: திமுக - 18, காங்கிரஸ் - 9, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - 2, இந்திய கம்யூனிஸ்டு - 2, விடுதலை சிறுத்தைகள் - 2, மதிமுக - 1, ஐஜேகே - 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1, இந்திய ஜனநாயக கட்சி - 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 1.

அதிமுக, பாஜக, பாமக, காங்கிரஸ், அமமுக, புதிய தமிழகம் சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள் விவரம்: 

1. தம்பிதுரை (அதிமுக, முன்னாள் மக்களவை துணை சபாநாயகர்) - கரூர்
2. டாக்டர் ஜெயவர்தன் (அதிமுக, அமைச்சர் ஜெயகுமார் மகன்) - தென்சென்னை
3. கே.பி.முனுசாமி (அதிமுக, முன்னாள் அமைச்சர்) - கிருஷ்ணகிரி
4. தமிழிசை சவுந்தரராஜன் (பாஜக, தமிழக தலைவர்) - தூத்துகுக்குடி
5. பொன்.ராதாகிருஷ்ணன்(பாஜக, முன்னாள் மத்திய இணையமைச்சர்)  - கன்னியாகுமரி
6. ஹெச்.ராஜா (பாஜக) -  சிவகங்கை
7. நயினார் நாகேந்திரன் (பாஜக) -  ராமநாதபுரம்
8. சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக)  - கோவை
9. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (காங்கிரஸ்)  - தேனி
10. தங்க. தமிழ்ச்செல்வன் (அமமுக) - தேனி
11. அன்புமனி (பாமக) - தருமபுரி
12. எல்.கே.சுதீஷ் (தேமுதிக)  - கள்ளக்குறிச்சி
13. டாக்டர் கிருஷ்ணசாமி(புதிய தமிழகம்)  - தென்காசி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com