திமுக மக்களவைக் குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு

சென்னையில் நடைபெற்ற திமுக மக்களவை உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவைக் குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. ஒருமனதாக
திமுக மக்களவைக் குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு


சென்னையில் நடைபெற்ற திமுக மக்களவை உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவைக் குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

17-வது மக்களவைக்கான தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக அணி வெற்றிபெற்றது. 

இதில், திமுகவின் சின்னமான உதயசூரியன் சார்பில் 23 பேர் வெற்றி பெற்றனர். இதில், விசிகவைச் சேர்ந்த ரவிக்குமார் (விழுப்புரம்), மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தி (ஈரோடு), ஐஜேகேவைச் சேர்ந்த பாரிவேந்தர் (பெரம்பலூர்), கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த சின்ராஜ் (நாமக்கல்) ஆகிய 4 உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். 

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்களின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று சனிக்கிழமை மாலை 5 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த 19 மக்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் முன்னாள் மத்திய அமைச்சரும், கட்சியின் மூத்த தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான டி.ஆர்.பாலு திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத்தலைவராக கனிமொழியும், பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கமும் தேர்வு செய்யப்பட்டுள்னர். 

திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

அதேபோன்று, திமுக மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவாவும், கொறடாவாக டி.கே.எஸ். இளங்கோவனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். .

மக்களே எஜமானர்கள்; மக்களே மகேசர்கள் என்பதை மறவாமல் நாள்தோறும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று திமுக மக்களவை உறுப்பனர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com