கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்!

தமிழகத்தில் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்தும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்!


தமிழகத்தில் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்தும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

கடந்த மாதம் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்திய கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் நோய்த் தாக்குதல்களுக்கு உள்ளாகும் கால்நடைகளுக்கு வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் 22 மாவட்டங்களில் அம்மா ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆம்புலன்ஸில் கால்நடைகளுக்கு எக்ஸ்ரே எடுக்கும் வசதி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அவற்றை எளிதாக தூக்கும் வசதியும் ஆம்புலன்ஸில் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆம்புலென்ஸ் சேவையைப் பெற 1962 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார். 

மேலும் சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை மருத்துவக் கல்லூரிக்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும். இந்தத் தொழில் பூங்கா வளாகத்தில் கால்நடை பண்ணை, கால்நடை மருத்துவமனை, பால் உப பொருள்கள் உற்பத்தி நிலையம், கால்நடைகளின் இறைச்சியினை பதப்படுத்தி விற்பனை செய்வதற்கான மையம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வீடுகளுக்கே சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 22 மாவட்டங்களில் அம்மா ஆம்புலன்ஸ் விரிவுபடுத்தும் திட்டத்தை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

1962 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் கால்நடைகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில், தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்பட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com