முகப்பு தற்போதைய செய்திகள்
தில்லி காசியாபாத்-ஹூப்ளி முதல் விமான சேவை தொடங்கியது!
By DIN | Published On : 07th November 2019 09:14 AM | Last Updated : 07th November 2019 09:14 AM | அ+அ அ- |

சிறுநகரங்களை வான்வழியாக இணைக்கும் உடான் திட்டத்தின் கீழ், தில்லியை அடுத்த காசியாபாத்தின் ஹிண்டன் விமான நிலையத்தில் இருந்து, கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு முதல் நேரடியான பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சிறுநகரங்களை வான்வழியாக இணைக்கும் உடான் திட்டத்தின் கீழ், தில்லியை அடுத்த காசியாபாத்தின் ஹிண்டன் விமான நிலையத்தில் இருந்து, கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு முதல் நேரடி பயணிகள் விமான சேவையை ஸ்டார் ஏர் என்ற தனியார் நிறுவனம் தொடங்கியுள்ளது.
50 பேர் பயணம் செய்ய கூடிய இந்த ஜெட் விமானம் ஹூப்ளியில் இருந்து புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமை என வாரத்தில் மூன்று முறை இயக்கப்படும். இதில் பயண கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.3,699 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தில்லி விமான நிலையத்தில் விமானங்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் அதன் சுமையைக் குறைக்கும் வகையில் காசியாபாத்தில் இருந்து இந்த சிறிய விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
பயணிகள் விமானத்தின் சேவையை ஸ்டார் ஏர் நிறுவனம் அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விரிவுபடுத்தி வருகிறது. இதில் உடான் திட்டத்தின் கீழ் மிக அதிக தூரத்திற்கு இயக்கப்படும் விமானமும் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.