நவ.21: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

கடந்த 3 தினங்களாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: கடந்த 3 தினங்களாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதம் இருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைக்கும் நடைமுறை கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 3 தினங்களாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விருப்பனையாகி வருகின்றன. இன்று வியாழக்கிழமை (நவ.21) பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.77.13 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.69.59 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com