மகாராஷ்டிராவுக்கு நிலையான அரசு தேவை, 'கிச்சடி' அரசு அல்ல:  முதல்வர் ஃபட்னாவிஸ்

மகாராஷ்டிர முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள தேவேந்திர ஃபட்னாவிஸ், மாநிலத்திற்கு ஒரு நிலையான அரசு
மகாராஷ்டிராவுக்கு நிலையான அரசு தேவை, 'கிச்சடி' அரசு அல்ல:  முதல்வர் ஃபட்னாவிஸ்

மும்பை: மகாராஷ்டிர முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள தேவேந்திர ஃபட்னாவிஸ், மாநிலத்திற்கு ஒரு நிலையான அரசு தேவை என்றும் இதுவொரு 'கிச்சடி' கூட்டணி அரசு அல்ல  என்று கூறினார்.

பதவேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர் முதல்வர் ஃபட்னாவிஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "மக்கள் எங்களுக்கு ஒரு தெளிவான ஆணையை வழங்கியிருந்தனர், ஆனால் சிவசேனா முடிவுகளுக்குப் பிறகு மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்க முயன்றது, இதன் விளைவாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்தது. 

தொடர்ந்து மராட்டியத்தில் குடியரசு தலைவர் ஆட்சி நீடிப்பது நல்லதல்ல.  அதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம். மகாராஷ்டிராவுக்கு ஒரு நிலையான அரசாங்கம் தேவை,  இதுவொரு 'கிச்சடி' கூட்டடணி அரசாங்கம் அல்ல.  நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி அதில் ஒப்புதல் ஏற்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளோம் என கூறினார்.  இதனை அடுத்து மராட்டியத்தில் கடந்த 10 நாட்களாக நீடித்து வந்த குடியரசு தலைவர் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பாஜக 105 இடங்களை வென்றது, சிவசேனா 56, என்சிபி 54 மற்றும் காங்கிரஸ் 44 இடங்களில் வென்றது. 

105 இடங்களைக் கொண்ட பாஜக, 54 இடங்களில் வென்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இன்று கூட்டணி அரசு அமைத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com