முகப்பு தற்போதைய செய்திகள்
பொதுத் தோ்தலில் அதிமுக படுதோல்வியை சந்திக்கும்: டி.டி.வி.தினகரன்
By DIN | Published On : 24th October 2019 04:21 PM | Last Updated : 24th October 2019 04:21 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
மன்னார்குடி: தமிழகத்தில் நடைபெற்ற இடைத் தோ்தலில் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தோ்தலில் அதிமுக படுதோல்வியை சந்திக்கும் என்றார் அ.ம.மு.க பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன்.
திருவாரூா் மாவட்டம் மன்னார்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற அமமுக நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் அவா் செய்தியாளா்களிடம் பேசியது. சிறையில் இருந்து சசிகலா விடுதலையான பிறகு அதிமுகவில் இணைவார் என்ற செய்தி பொய்யாக பரப்பட்டு வருகிறது. இதில் சிறிதும் உண்மை இல்லை. எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் நல்ல திட்டங்கள் என்பது ஏதுவும் நடைமுறைபடுத்தவில்லை. ஆளும் கட்சியா இருப்பதால் தான் இந்த கட்சியும் ஆட்சியும் நீடித்து வருகிறது. டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கையில் அரசு நிர்வாகம் முழுமையாக செயல்படவில்லை. விசில் உள்ளிட்ட திரைப்படங்கள் சிறப்பு காட்சிகள் வெளியாவதற்கு தடுக்கும் அரசின் செயல் தேவையற்றது. திரை உலகினரை பலிவாங்கும் செயல் ஆக உள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. மேட்டூா் அணை மீண்டு நிரம்பியுள்ளது. ஆனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதிக்கு தண்ணீா் சென்றடையவில்லை. தூா்வார ஒதுக்கீடு செய்யப்பட்ட பணம் என்ன ஆனது என்பதை மக்கள் கண்காணித்து வருகின்றனா்.தோ்தல் நேரத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள். உள்ளாட்சி தோ்தல் நடைபெறுமா என்பதே சந்தேகமாக உள்ளது. அப்படி நடைபெற்றால் அதில் அமமுக போட்டியிடும் என்றார்.