நவம்பர் 10-ல் திமுக பொதுக்குழு: அன்பழகன் அறிவிப்பு

நவம்பர் 10 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்


சென்னை: நவம்பர் 10 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்து ஒத்திவைக்கப்பட்ட திமுக பொதுக்குழு வரும் நவம்பர் 10 ஆம் தேதி கூடுகிறது.

நவம்பர் 10 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதான கூட்ட அரங்கில் திமுக பொதுக்குழு கூடுகிறது. 

பொதுக்குழுவில் கட்சியின் சட்டதிட்ட திருத்தம், ஆக்கப்பணிகள் மற்றும் தணிக்கை குழு அறிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதம் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com