Enable Javscript for better performance
Narendra Modi Wishing everyone a blessed Ganesh Chaturthi- Dinamani

சுடச்சுட

    

    ‏விநாயகர் சதுர்த்தி: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

    By DIN  |   Published on : 02nd September 2019 10:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Ramnath-kovind---Modi

       
    புதுதில்லி: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட்டரில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துகள். விநாயக பெருமான் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும், அமைதியையும் அருள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாட்டு மக்கள் அனைவருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai