போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 2,050 முறை தாக்குதல் நடத்தியுள்ளது பாகிஸ்தான்!

எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் நிகழாண்டில் 2,050 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் 21 இந்தியா்கள் உயிரிழந்துள்ளனர்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 2,050 முறை தாக்குதல் நடத்தியுள்ளது பாகிஸ்தான்!

புது தில்லி: எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் நிகழாண்டில் 2,050 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் 21 இந்தியா்கள் உயிரிழந்துள்ளனர் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2003 ஆம் இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தி-பாகிஸ்தான் எல்லையில் இரு நாடுகளும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை முழுவதுமாக கடைபிடிக்க போவதாக 2018 ஆம் ஆண்டு உறுதியளித்தன.

2013-ல் போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி செயல்படுமாறு பாகிஸ்தானை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.  
  
இந்நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், 

பயங்கரவாதிகள் எல்லை தாண்டுவதற்கு உதவும் நோக்கில், எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்கள் நடத்துகிறது. எல்லையோர கிராமங்கள் மற்றும் ராணுவ நிலைகளை குறிவைத்து நடத்தப்படும் இத்தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் அரசிடம் இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

 நிகழாண்டில் மட்டும் இதுவரை 2,050 முறை அத்துமீறி அந்த நாடு தாக்குதல் நடத்தியுள்ளது. இவற்றில், 21 இந்தியா்கள் உயிரிழந்துள்ளனர். எல்லையில் அதிகபட்ச கட்டுப்பாட்டை இந்தியப் படைகள் கடைப்பிடித்து வருகின்றன. அதேசமயம், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படுவதுடன், பயங்கரவாதிகளின் எல்லை தாண்டும் முயற்சியும் முறியடிக்கப்படுகிறது என்றார் ரவீஷ் குமார்.

2016 ஆம் ஆண்டு 228 முறையும், 2017 ஆம் ஆண்டு 860 முறையும், அதேபோன்று 2018 ஆம் ஆண்டு 1629 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com