அயோத்தி வழக்கு விசாரணையை அக்டோபர் 18க்குள் நிறைவு செய்ய தலைமை நீதிபதி வேண்டுகோள்

சர்ச்சைக்குரிய பாபர் மசூதி - ராமர் ஜென்ம பூமி தொடர்புடைய 2.77 ஏக்கர் அயோத்தி நிலம் குறித்த வழக்கு நாடு முழுவதுமே பெரிதும் எதிர்பார்க்க கூடிய
அயோத்தி வழக்கு விசாரணையை அக்டோபர் 18க்குள் நிறைவு செய்ய தலைமை நீதிபதி வேண்டுகோள்


புதுதில்லி: அயோத்தி வழக்கின் வாதங்களை அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

சர்ச்சைக்குரிய பாபர் மசூதி - ராமர் ஜென்ம பூமி தொடர்புடைய 2.77 ஏக்கர் அயோத்தி நிலம் குறித்த வழக்கு நாடு முழுவதுமே பெரிதும் எதிர்பார்க்க கூடிய வழக்காக இருக்கிறது.

கடந்த மே மாதம் அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழுவானது ஜூலை மாதம் வரை பேச்சுவார்த்தையை நடத்தியது. அதில் முன்னேற்றம் இல்லை என்பதால் வழக்கை உச்சநீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால்
உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் அரசியல் சாசன அமர்வு தினமும் விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ. நஸீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இதனை விசாரிக்கிறது. அந்த வகையில் இன்று புதன்கிழமை 26-ஆவது நாளாக விசாரணை நடைபெற்ரு வருகிறது. 

இன்று விசாரணை தொடங்கியபோது அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் அனைத்து தரப்பு வாதங்களையும் முடிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்தார்.

இதனிடையே, பேச்சுவார்த்தையை தொடரவேண்டும் என்று 2 மனுதாரர்கள் கேட்டுக் கொண்டதால் பேச்சுவார்த்தையை. தொடரமுடியுமா என்று கேட்டு அதன் தலைவர் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மனுதார்கள் விரும்பினால் பேச்சுவார்த்தையை ஒருபக்கம் நடத்தலாம் என்று தெரிவித்த நீதிபதிகள், அதனால் வழக்கு விசாரணை பாதிக்கப்படாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

வரும் நவம்பர் 17 ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்னதாக விசாரணையை முடித்து தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com