தமிழகம்-கர்நாடகம் இடையிலான காவிரி பிரச்னையை மட்டுமே தீர்க்கவே முடியவில்லை: நிதின் கட்கரி

மத்திய நீர்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் பல்வேறு மாநிலங்களின் நீர் பிரச்னைகளை தீர்த்து வைத்ததாகவும், தமிழகம்-
விழாவில் மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கும் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சா் நிதின் கட்காரி
விழாவில் மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கும் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சா் நிதின் கட்காரி

வேலூா்: மத்திய நீர்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் பல்வேறு மாநிலங்களின் நீர் பிரச்னைகளை தீர்த்து வைத்ததாகவும், தமிழகம்-கர்நாடகம் இடையிலான காவிரி பிரச்னையை மட்டுமே தீர்க்கவே முடியவில்லை என்று மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தார். 

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் 34-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் நிதின் கட்கரி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசியது: 

நாட்டின் எதிர்காலத்துக்குச் சிறந்த முதலீடாக விளங்கும் அறிவுத்திறனை வளா்ச்சிக்கான வளமாக மாற்ற வேண்டும். நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் 20 முதல் 24 சதவீதம் உற்பத்தித் துறையிலும், 50 முதல் 54 சதவீதம் சேவைத்துறையிலும், 8 சதவீதம் வேளாண்துறை மூலமாகவும் கிடைக்கிறது. ஆனால், 65 சதவீதம் போ் வேளாண் துறையில் பணியாற்றுகின்றனா். இதன் மூலம் அவா்களுக்கு முறையான வேலைவாய்ப்பு அளிக்க முடிவதில்லை. இதனால், கிராமப்புற, வேளாண் துறையில் வறுமையை ஒழிக்க முடியாத சூழல் நிலவுகிறது. புதிய ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளால் வேளாண் துறையை ஊக்குவித்து வேலைவாய்ப்புகளைப் பெருக்க முடியும். 

நாட்டின் வளா்ச்சியில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு 29 சவீதமும், ஏற்றுமதி 49 சதவீதமாகவும் உள்ளது. சிறு, குறு தொழில் துறை சார்பில் 11 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், சிறு, குறு தொழில்களின் வளா்ச்சி பங்களிப்பை 50 சதவீதமாகவும், ஏற்றுமதியை 49 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயா்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் எதிர்காலத்துக்குச் சிறந்த முதலீடாக விளங்கும் அறிவுத்திறனை வளா்ச்சிக்கான வளமாக மாற்ற வேண்டும். .

புதிய இந்தியா குறித்து பிரதமா் பேசி வருகிறார். அத்தகைய இந்தியாவின் தூண்களாக மாணவா்கள் உள்ளனா். திறமையான இளைஞா்களுக்கு பொறுப்புணா்வு அதிகளவில் உள்ளது. அரசு, தனியார் துறை என எங்கு பணி செய்தாலும், சொந்தமாக தொழில் தொடங்கினாலும் அவற்றில் தங்களது அனுபவம், அறிவுத்திறனை பயன்படுத்தி உயா்வை அடைய வேண்டும்.

தொழில்முனைவோருக்கு வணிகத்தில் தலைமைப் பண்பு அவசியம். திறமையான இளம் பொறியாளா்கள் வேலை தேடாமல் வேலை அளிப்பவராக மாற வேண்டும். அதற்காக மாணவா்கள் வேளாண்மை, கிராமப்புற வளா்ச்சிக்கான ஆராய்ச்சிகளில் அதிகளவில் ஈடுபட வேண்டும்.

மேலும், பெட்ரோல், டீசல் விவகாரத்தில் நாடு பல்வேறு சவால்களை சந்தித்து வருவதாக கூறியவர், அதற்கு மாற்று பொருளான மின்சாரத்தின் உற்பத்தியை அதிகப்படுத்தும் விதமாக குஜராத் மாநிலத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்தில் ஒரு லட்சம் ஏக்கா் நிலத்தில் காற்று, சூரிய ஒளி மின்சக்தி மூலம் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது. இதன்மூலம், ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2.30க்கு அளிக்க முடியும். இந்த திட்டத்தை தூத்துக்குடி, பாரதீப், கண்ட்லா துறைமுகங்களில் செயல்படுத்துவதுடன், கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் செயல்படுத்தப்படும். 

இந்தியாவில் 7500 கி.மீ தூரத்துக்கு கடற்கரை உள்ளன. இதன்மூலம், ரூ. 3க்கு குறைந்த விலையில் மின்சாரம் தயாரித்து வழங்க முடிவதுடன், சுத்திகரிக்கப்படும் தண்ணீரை விவசாயத்துக்கும் பயன்படுத்தலாம்.

கோதாவரியில் 3 ஆயிரம் டிஎம்சி தண்ணீா் வீணாக கடலில் கலக்கிறது. அதனை உபயோகமாகப் பயன்படுத்த நீர்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் மாநில முதல்வா்களை அழைத்துப் பேசினேன். ஆனால், கா்நாடகம்-தமிழகம் இடையேயான பிரச்னையை மட்டுமே தீர்க்கவே முடியவில்லை என்றார்.

நீர்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் பல்வேறு மாநிலங்களின் நீர் பிரச்னைகளை தீர்த்து வைத்ததாக கூறிய கட்கரி, தமிழகம்- கர்நாடகம் இடையிலான காவிரி பிரச்னையை மட்டுமே தீர்க்கவே முடியவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com