மியான்மரில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  85 ஆக உயர்வு

மியான்மரில் கரோனா நோய்த்தொற்று புதிதாக 11 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ள
மியான்மரில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  85 ஆக உயர்வு


யாங்கோன்: மியான்மரில் கரோனா நோய்த்தொற்று புதிதாக 11 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் புதிதாக நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் ஒன்பது பேர் யாங்கோன் மற்றும் மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே பகுதி மற்றும் சின் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 

நாட்டில் முதன்முதலில் மார்ச் 23 ஆம் தேதி நோய்த்தொற்று கண்டறியப்பட்டதில் இருந்து 25 நாட்களில் இதுவரை நான்கு பேர் பலியாகி உள்ளனர். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பாரம்பரிய திங்கியன் நீர் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது .   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com